Friday, May 2



Tuesday, May 31

தமிழடி நீ எனக்கு!

                                                  சித்ரா முருகன்
தமிழடி  நீ   எனக்கு!
சித்திரை மாதத்து
'கத்திரி வெயிலடி'!
நான் உனக்கு!
சத்தியமாய்ச் சொல்வேன்
'முத்திரை உயிலடி'
நீ எனக்கு!

யாரடி 'அது' என
அன்புத்தோழி விளிக்கையிலே!
"அம்மாவின் அண்ணாவின் மகனார்"
என உரைக்கலாகுமோ!

'ஊரைச் சுற்றி நான் வருவது போல்!
உறவைச் சுற்றி நீ தான்.....
"உளறலாகுமா" !
'அத்தான்' என்று ஆசையுடன்
பகர்ந்தாலென்ன பைந்தமிழே!
பறக்கத்தான் பறக்குமோ
உந்தன் வீட்டு கெளரவமே!

தளிர்க் கரம் பற்றையிலே!
தாவியுனை அனணக்கையிலே!
தாமரையே நினக்கொப்ப
"தங்கத்தமிழை" நினைப்பேனடி!

கண்களில் தெரியும் உன்
'கர்வம்' பார்க்கையிலே!
"கன்னித்தமிழை" நினைப்பேனடி!

வெண்சங்கு கழுத்தையும்........
சேர்த்துப் பார்க்கையிலே!
"சங்கத்தமிழை" நினைப்பேனடி!

வெட்டி வீழ்த்திடும் உன்
பேச்சது கேட்கையிலே!
"வீரத்தமிழை" நினைப்பேனடி!

வெடித்து சிரிக்கும் உன்
பாளை சிரிப்பை பார்க்கையிலே!
நான் கனவில் கண்ட
"பண்னடத் தமிழகம்"
நித்தம் நனவில் விரியுதடி!

மொத்தத்தில் உன்னை
முச்சங்கம் வளர்த்த
"தந்ததமிழ்" என 
எந்தன் உள்ளம் சொல்லுமடி!

                                                       சுந்தரவள்ளி சகாதேவன்



 இதுவும் நான் என்லார்ஜ் முறைப்படி வரைந்தது.






Monday, May 30

நீ மட்டும் சொந்தம்!




மலருக்கு
"மணம்" சொந்தம்!


வானுக்கு 
"நிலவு" சொந்தம்!


சொல்லுக்கு
"செயல்" சொந்தம்!


கடலுக்கு
"அலை" சொந்தம்!


கண்ணுக்கு
"இமை" சொந்தம்!


கோடைக்கு
"வெப்பம்" சொந்தம்!


தமிழுக்கு
"இயல்,இசை,நாடகம்" சொந்தம்!


எனக்கு 
"உனையன்றி" வேறு யார் சொந்தம்?
நீ...நீ...மட்டும் தான் சொந்தம்!!.

Sunday, May 29

ஆதங்கம்!

 எனது கிறுக்கல் முயற்சி.



 

இசை!
தித்திக்கும் தேனாக!
நளினமான  நதி ஓசையாக!
உண்ண உண்ணத் தெவிட்டாத
அருஞ்சுவையாக!
இதயத்தை வருடும்
மெல்லிய பூந்தென்றலான நீ!
இன்று!
இடியும் மின்னலுமாக!
மனதைப் பிளக்கும் பூகம்பமாக!
ஒரு புயலாய் மாறியது ஏனோ?










Friday, May 27

இருளும் ஒளியும்

நான் பார்த்து வரைந்த ஓவியங்கள்.

சிறிய படங்களைப் பார்த்து என்லார்ஜ் முறைப்படி வரைந்தது.
                                                                                            
                                                                                      சித்ராமுருகன்.

இருளும் !ஒளியும்!

எதையெதையோ தேடி!
எந்திரம்போல் ஓடி!
நிலையில்லா வாழ்வை நாடி!
"நிலை தடுமாறும் உள்ளம்" பாரீர்!

எதைக் கொண்டு வந்தோம்!
எதைக் கொண்டு போவோம்!
"கீதை கருத்தை உணர்வோம்" !
போதை மயக்கம் தெளிவோம்!

காணும் இன்பம் உலகில்
"கானல் நீர்" தானோ!
வீணே அதன்பின் அலைதல்
வெட்டி வேலை தானோ!

அலுப்பும், சலிப்பும், சஞ்சலமும்
அன்பு நெஞ்சம் ஒன்று!
அடைவதுண்டோ தோழி!

ஆர்பரிக்கும் கடலும்!
ஆனந்த பூங்காற்றும்!
அந்தி மயங்கிய நிலவொளியும்!
'அந்த வாழ்வின் இரகசியம்'
சொல்லித்தரவில்லையா?
ஏற்ற இறக்கம் என 
எப்போதும் வாழ்வில்! இதை
இயற்கை உணர்த்தவில்லையா?

"கோடை வெப்பத்தை" கொடையாய்
கொடுத்த இறைவன்!
"குளிர் நிலவின் குளிர்ச்சி"! உள்ளம்
குளிர்ந்து தரவில்லையா?

"பாலை" நிலத்தைப் பார்த்து
படைத்த இறைவன்! ஆங்கோர்
"சோலையையும்" சொருகி
வைக்க தவறவில்லையே!
'கானல் நீர் வாழ்க்கை' என
கலங்குவது வீண் தோழி!

கடுங்குளிரிலும், காற்றிலும், மழையிலும்
கானகம்வாழ் கருங்குயில் கூட்டம்
கானம் இசைக்கவில்லையா! அந்த
காதலையும் சொல்லவில்லையா? 'அதை நீ'
கண்ணால் கண்டதில்லையா!

கசக்கும் கடுக்காயை கருத்தோடு
படைத்த பகவான்! 'பாவம் நாம்' என்று
கனியும், கரும்பும், தேனும்
கனிவோடு தரவில்லையா!

வெந்ததை திண்போம்!
விதி வந்தால் சாவோம்! என
நொந்து போதல் முறையா!

இன்பமும் துன்பமும் சேர்த்து!
இரண்டற கலந்தே தந்தான்!
இறைவன்! இது உணர்ந்து!
'இறைவழி' சென்று!
இல்வாழ்வில் நிதமும்
இன்பம் தேடு என்றும்!.


 சுந்தரவள்ளி சகாதேவன்.


Wednesday, May 18

ஒவியமும் கவிதையும்.

                  சித்ரா முருகன்.

என் ரங்கோலிக்கு சுந்தரவள்ளி சகாதேவன்  எழுதிய கவிதை.

ஓவிய ஓசை 
பொன்னந்தி மாலையிலே !
என்னோடு பேசையிலே!
" என்னவரே உன் காதல் நெஞ்சம் "
ஓசையில்லா பாஷையிலே !
சொன்னாலும் புரியாத
புதிரான சைகையிலே
பண்ணிசைத்தே ஓடிவரும் 
தூதாகத் தொலைபேசியிலே !.
சுந்தரவள்ளி சகாதேவன்

அந்தமான் தமிழர் சங்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.