Tuesday, May 31

தமிழடி நீ எனக்கு!

                                                  சித்ரா முருகன்
தமிழடி  நீ   எனக்கு!
சித்திரை மாதத்து
'கத்திரி வெயிலடி'!
நான் உனக்கு!
சத்தியமாய்ச் சொல்வேன்
'முத்திரை உயிலடி'
நீ எனக்கு!

யாரடி 'அது' என
அன்புத்தோழி விளிக்கையிலே!
"அம்மாவின் அண்ணாவின் மகனார்"
என உரைக்கலாகுமோ!

'ஊரைச் சுற்றி நான் வருவது போல்!
உறவைச் சுற்றி நீ தான்.....
"உளறலாகுமா" !
'அத்தான்' என்று ஆசையுடன்
பகர்ந்தாலென்ன பைந்தமிழே!
பறக்கத்தான் பறக்குமோ
உந்தன் வீட்டு கெளரவமே!

தளிர்க் கரம் பற்றையிலே!
தாவியுனை அனணக்கையிலே!
தாமரையே நினக்கொப்ப
"தங்கத்தமிழை" நினைப்பேனடி!

கண்களில் தெரியும் உன்
'கர்வம்' பார்க்கையிலே!
"கன்னித்தமிழை" நினைப்பேனடி!

வெண்சங்கு கழுத்தையும்........
சேர்த்துப் பார்க்கையிலே!
"சங்கத்தமிழை" நினைப்பேனடி!

வெட்டி வீழ்த்திடும் உன்
பேச்சது கேட்கையிலே!
"வீரத்தமிழை" நினைப்பேனடி!

வெடித்து சிரிக்கும் உன்
பாளை சிரிப்பை பார்க்கையிலே!
நான் கனவில் கண்ட
"பண்னடத் தமிழகம்"
நித்தம் நனவில் விரியுதடி!

மொத்தத்தில் உன்னை
முச்சங்கம் வளர்த்த
"தந்ததமிழ்" என 
எந்தன் உள்ளம் சொல்லுமடி!

                                                       சுந்தரவள்ளி சகாதேவன்



 இதுவும் நான் என்லார்ஜ் முறைப்படி வரைந்தது.






3 comments:

sathishsangkavi.blogspot.com said...

/வெடித்து சிரிக்கும் உன்
பாளை சிரிப்பை பார்க்கையிலே!
நான் கனவில் கண்ட
"பண்னடத் தமிழகம்"
நித்தம் நனவில் விரியுதடி!//

நல்ல வரிகள்... பகிர்ந்தமைக்கு நன்றி...

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_3765.html

tech news in tamil said...

//கண்களில் தெரியும் உன்
'கர்வம்' பார்க்கையிலே!
"கன்னித்தமிழை" நினைப்பேனடி!//

நல்ல பதிவு..........!

Post a Comment