ஓவியமும் அதற்கேற்ற கவிதையும்.
சித்ரா முருகன்.
நிறைமதியே குறை கேளாயோ!
இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டானே!
இயற்க்கையை கொஞ்சம் மாற்றிவிட்டானே!
வானமதில் மிதந்த வெண்மதியை
வாசலில் இறங்க வைத்தானே!
வாது சூது அறியா வெண்ணிலவே
தூது போக துணை நீதானே!
வாராயோ வெண்மதியே
கேளாயோ என் குறையே!
நேரிழையாள் நேரத்திற்கு
சமைத்து வைத்தாள்!
நேரங்கழித்தே வருவார்!
' என்னவரும் '!
வந்தவுடன் வந்தமர்வாரா?
சாப்பிடவும்!
வரவு செலவு பார்த்து!
வந்தது போனது பேசி!
வாடிய என் வதனம் கண்டபின்
வந்தமர்வார் சாப்பிடவும்!
தொலைபேசி கிணுகிணுக்கும்
தொல்லைதரும் தொலை தொடர்பை
தொலைக்க வேண்டும் எந்நாளும்!
ஆண்பிள்ளை அவர்தான் என்றாலும்
ஆணையிட வேண்டும் ஒரு நாளும்!
"முழுதாக மூடிய வீட்டிற்குள் '
இருக்க முடியுமா? உன்னாலும்!
கேட்டுச் சொல்லனும் நீ
ஒளி ஓவியமே இந்நாளும்!
சுந்தரவள்ளி சகாதேவன்.
No comments:
Post a Comment